உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து சிவன் கோயில்​களுக்கு பாத யாத்​திரை செல்​வது வழக்​கம். அதன்​படி உ.பி.​யில் புனித யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்​லாதவர்​கள் நடத்த தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், கடை உரிமை​யாளரின் பெயர், கைப்​பேசி எண் போன்​றவற்றை கடைக்கு முன்​னர் எழுதி வைக்க வேண்​டும், யாத்​திரை செல்​லும் பாதைகளில் இறைச்​சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டுள்​ளார். யாத்திரைக்கு கடந்த ஆண்​டும் இதே​போல் கட்​டுப்​பாடு வி​திக்​கப்​பட்​டது.

காவடி யாத்​திரை செல்​லும் பாதைகளில் இது​போன்ற கட்​டுப்​பாடு​களை விதிக்க வேண்​டும் என்று கடந்த 2023-ம் ஆண்டே யஷ்வீர் மஹராஜ் என்ற துறவி கோரிக்கை விடுத்​திருந்​தார். இவர் ‘‘யோகா சாத​னா’’ என்ற ஆசிரமத்தை முசாபர்​நகரில் நடத்தி வரு​கிறார்.

கடந்த 2 நாட்​களுக்கு முன்​னர் டெல்லி – டேராடூன் நெடுஞ்​சாலை​யில் உள்ள பண்​டிட் வைஷ்னோவ் தாபா​வில் யோகா சாத​னா​வை சேர்ந்த சீடர்கள் சோதனை நடத்​தினர். ஆதார் அட்​டை​யின்​படி ஒரு கடை​யின் உரிமை​யாளர் பெயர் முஸ்​லிம் என்று தெரிய வந்​துள்​ளது. அதன்​பின்​னர் ஊழியர்​களின் கீழாடையை அவிழ்த்து சீடர்​கள் பார்த்​துள்​ளனர்.

இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதையடுத்து யாஷ்வீர் மஹராஜின் 6 சீடர்​களிடம் விளக்​கம் கேட்டு முசாபர்​நகர் புது​மண்டி போலீ​ஸார் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளனர்.

இதுகுறித்து யஷ்வீர் மஹராஜ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘‘போலீ​ஸாரின் நோட்​டிஸுக்கு சீடர்​கள் விளக்​கம் அளிப்​பார்​கள். அவர்​கள் மீது வழக்கு தொடுக்க முயன்​றால் கடுமை​யாக எதிர்ப்​போம். காவடி சுமக்​கும் பக்​தர்​கள் வாங்​கும் உணவில் எச்​சில் துப்​பிய​தால்​தான் இந்த நடவடிக்​கை. போலீஸ் நோட்​டிஸுக்கு அஞ்ச மாட்​டோம்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இஸ்​லாமிய இறைத் தூதர் நபிகள் பற்றி 2015-ம் ஆண்டு விமர்​சனம் செய்​த​தால் யஷ்வீர் பிரபல​மா​னார். இதுதொடர்​பான வழக்​கில் அவர் ஏழரை மாதம் சிறை தண்​டனை அனுப​வித்​தார். அப்​போது இருந்த சமாஜ்​வாதி ஆட்​சி​யில் யஷ்வீர் மீது தேசிய பாது​காப்பு சட்​ட​மும் போடப்பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.