சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அறப்போர் இயக்கம் வழக்கில், ஒரு வாரத்தில், தமிழ்நாடு அரசு பதில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ397 கோடிக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். […]
