ரூ.112 கோடியில் நலவாழ்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்​தில் மாநக​ராட்​சி, நகராட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் ரூ.52 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 50 ஊரக, நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: ‘நகர்ப்​புறங்​களில் மக்​கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்​து​வ​மனையை நோக்கி வரு​வ​தால், மருத்​து​வ​மனை​களில் கூட்​டம் அதி​க​மாகி வரு​கிறது. இந்த நிலையை மாற்​றி, ஒருங்​கிணைந்த, தரமான மருத்​துவ சேவை​களை மக்​களின் இருப்​பிடங்​களுக்கு அரு​கிலேயே வழங்​கும் நோக்​கில், சென்னை உள்​ளிட்ட 21 மாநக​ராட்​சிகள், 63 நகராட்சி பகு​தி​களில் 708 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள் ரூ.177 கோடி​யில் புதி​தாக அமைக்​கப்​படும்’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கடந்த 2022-ம் ஆண்டு 110-வது விதி​யின்​கீழ் அறி​வித்​தார்.

முதல்​கட்​ட​மாக, சென்னை உள்​ளிட்ட மாநக​ராட்​சிகள், நகராட்சி பகு​தி​களில் தலா ரூ.25 லட்​சம் செல​வில் 500 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள் ரூ.125 கோடி செல​வில் அமைக்​கப்​பட்டு கடந்த 2023 ஜூன் 6-ம் தேதி திறக்​கப்​பட்​டு, இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில் 2-ம் கட்​ட​மாக, தலா ரூ.25 லட்​சம் செல​வில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​களை மக்​கள் பயன்​பாட்​டுக்​காக முதல்​வர் ஸ்டா​லின் நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார். சென்னை அடை​யாறு சாஸ்​திரி நகரில் கட்​டப்​பட்​டுள்ள நகர்ப்​புற நலவாழ்வு மையத்தை நேரில் திறந்து வைத்​து, நோயாளி​களுக்கு அளிக்​கப்​படும் சிகிச்​சைகளை பார்​வை​யிட்​டார். இந்த மையங்​களில் தலா ஒரு மருத்​து​வர், செவிலியர், சுகா​தார ஆய்​வாளர், உதவி பணி​யாளர் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல, தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள 50 ஊரக, நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை​யும் காணொலி வாயி​லாக முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். இந்த நிகழ்​வில் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், சென்​னை மேயர்​ ஆர்​.பிரி​யா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.