10 ஆண்டுக்கான பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு

புதுடெல்லி: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க பாது​காப்பு தளவாட விற்​பனை மற்​றும் இரு நாடு​களுக்​கும் இடையே நெருக்​க​மான பாது​காப்பு மற்​றும் தொழில் துறை ஒத்​துழைப்​பின் அவசி​யம் குறித்து இரு தலை​வர்​களும் விரி​வாக ஆலோசித்​தனர். அமெரிக்​காவை பொருத்​தவரை​யில் தெற்​காசி​யா​வில் முக்​கிய நெருங்​கிய கூட்​டாளி​யாக இந்​தியா உள்​ளது என்​பதை ஹெக்​செத் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இவ்​வாறு பென்​டகன் அறிக்கை தெரி​வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.