500% வரி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் கவலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

குடியரசுக்கு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் ஆதர​வுடன் வெளிவந்​துள்ள இந்த மசோதா ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது 500 சதவீத வரி விதிக்க வழி​வகை செய்​கிறது. ரஷ்​யா​விட​மிருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்து வரு​கிறது.

இந்த நிலை​யில், இந்த புதிய தடை மசோ​தா​வால் இந்​தியா மற்​றும் சீனா ஆகிய நாடு​கள் பெரிதும் பாதிப்​படை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. எனவே இதனை எவ்​வாறு எதிர்​கொள்​வது என்​பது இருதரப்​பிலும் ஆலோசிக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.