மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்குவது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடவுள் மறுப்பாளரான அண்ணாதுரை பெயரில் இந்து கோவில்களில் அன்னதானம் வழங்குவது ஏன் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது. ஒருவர் பெயரில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை தெளிவுபடுத்த வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியது. தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் நினைவு […]
