சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படும் காவல் துறை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்த ஓ.பன்​னீர்​செல்​வம், குடும்​பத்​தினருக்கு ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:காவல் துறையினர் சட்​டப்​படி செயல்ப​டா​மல், கொடூர​மான முறை​யில் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்துள்ளார். காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​வது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது.

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. இந்த சூழ்​நிலை மாற​வில்லை என்​றால், திமுக ஆட்சி வீழ்ச்​சி​யடைவது உறு​தி. காவல் துறை அதி​காரி​களின் விருப்​பப்​படியே இந்த ஆட்சி நடக்​கிறது. அஜித்​கு​மார் கொலை வழக்கு குற்​ற​வாளி​களை விரை​வாக விசா​ரித்​து, தண்​டனை பெற்​றுத் தர வேண்​டும்.

ஒவ்​வொரு கட்​சித் தலை​வருக்கும் தமிழக முதல்​வ​ராக வேண்​டுமென்ற விருப்​பம் இருக்​கும். ஆனால், யார் முதல்​வ​ராக வேண்​டும் என்​பதை தீர்​மானிக்க வேண்​டியது மக்​கள்​தான். எம்​ஜிஆர், ஜெயலலிதா காலங்​களில் தேர்​தலில் போட்​டி​யிட்டு தனிப் பெரும்​பான்மை பெற்று ஆட்சி அமைத்​த​தாகத்​தான் வரலாறு இருக்​கிறது. பறிக்​கப்​பட்ட அதி​முக தொண்​டர்​களின் உரிமை​களை மீட்க வேண்​டும் என்​ப​தற்​காகக்​தான் நாங்​கள் தொடர்ந்து போராடிக் கொண்​டிருக்​கிறோம். இவ்​வாறு ஓபிஎஸ் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.