மும்பை,
மும்பை போரிவிலி கண்பத் பாட்டீல் நகரில் வசித்து வருபவர் பப்பு மனு ரத்தோட் (வயது32). இவரது மனைவி ரேஷ்மா (27). கடந்த சில நாட்களாகவே குடும்பப்பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பப்பு மனு ரத்தோட் மனைவி ரேஷ்மா மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பப்பு மனு ரத்தோட் அருகில் இருந்த கிரானைட் வெட்டும் எந்திரத்தால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத அவர் அருகில் கிடந்த கயிற்றை எடுத்து ரேஷ்மாவின் கழுத்தை இருக்கி கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து பப்பு மனு ரத்தோட்டை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..