இமாச்சலில் மழைநீர், சகதி, குப்பையால் மூழ்கிய வங்கி கிளை: கோடிக்கணக்கான நகைகள், ரொக்கத்தின் நிலை என்ன?

சிம்லா: இ​மாச்சல பிரதேச மாநிலத்​தில் கடந்த 2 வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. மேலும், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 19 முறை மேகவெடிப்பு மழை அங்கு பதி​வாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் மண்டி மாவட்​டம் துனாக் கிராமத்​தி​லுள்ள இமாச்சல பிரதேச மாநில கூட்​டுறவு வங்​கிக் கிளை​யானது மழை நீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும் சகதி, குப்பை ஆகியவை வங்​கிக் கிளை முழு​வதும் தேங்​கிக் கிடக்​கிறது.

இதனால் கிளை​யில் டெபாசிட் செய்​யப்​பட்​டிருந்த கோடிக்​கணக்​கான மதிப்​புள்ள நகைகள், ரொக்​கத்​தின் நிலை என்​னவென்று தெரிய​வில்​லை. 2 மாடிகள் கொண்ட இந்​தக் கட்​டிடத்​தின் முதல் மாடி வரை தண்​ணீர் தேங்கி நிற்​கிறது. மழை வெள்​ளத்​தின் காரண​மாக வங்​கிக் கிளை​யின் முகப்​பிலிருந்து ஷட்​டர் அடித்​துச் செல்​லப்​பட்டு விட்​டது.

இதனால் வங்​கிக் கிளை​யின் உள்ளே தண்​ணீர் புகுந்து வங்கி முழு​வதும் நீர் நிரம்​பி​விட்​டது. கூடு​தல் வெள்ள நீர் பெருக்​கெடுத்து வந்​த​தால் மீதி​யிருந்த 2 ஷட்​டர்​களும் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதனால் வங்​கி​யில் எவ்​வளவு சேதம் ஏற்​பட்​டது என்று இது​வரை தெரிய​வில்​லை.

இதுகுறித்து வங்​கி​யில் கணக்கு வைத்​திருக்​கும் உள்​ளூர் வியா​பாரி ஹரி மோகன் என்​பவர் கூறும்​போது, “இந்த வங்​கிக் கிளை​யில் 150-க்​கும் மேற்​பட்ட வியா​பாரி​கள் கணக்கு வைத்​துள்​ளோம். மேலும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​களும் கணக்கு வைத்​துள்​ளனர். இவர்​கள் அனை​வருமே தினசரி பணத்தை டெபாசிட் செய்​தும், பணத்தை எடுத்​தும் வரு​கிறோம்.

துனாக் டவுன் பகு​தி​யில் வசிக்​கும் 8 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட மக்​கள், இந்த ஒரேயொரு வங்​கிக்​கிளை​யைத்​தான் நம்​பி​யுள்​ளனர். மழை வெள்​ளத்​தின் காரண​மாக வங்​கி​யில் இருந்த ரொக்​க​மும், நகைகளும் என்​ன​வா​யின என்​பது குறித்து கவலை​யாக உள்ளது” என்​றார்.

இமாச்​சலில் பெய்து வரும் கனமழைக்கு இது​வரை 78 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை இங்கு 23 முறை ஃபிளாஷ் ஃபிளட்​ஸ் எனப்​படும் வெள்​ளப்​பெருக்​கும், 19 முறை மேகவெடிப்பு மழை​யும், 16 முறை நிலச்​சரி​வும்​ ஏற்​பட்​டுள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.