மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார்மீது நகை திருடியதாக கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அஜித்குமாரை காட்டுமிராண்டித்தனமாக அடித்தும், உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தி கொன்றுள்ளது, வீடியோ மூலம் அம்பலமானது. […]
