மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்

புதுடெல்லி: கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால், சில அம்​சங்​களுக்​கான தடை​யுடன் புதிய வக்பு திருத்த சட்​டம் மீதான மத்​திய அரசின் நடவடிக்​கைகள் தொடர்​கின்​றன.

இதில், தேசிய அளவி​லான ஒரு இணை​யதளத்தை மத்​திய அரசு உரு​வாக்கி இருந்​தது. இதையடுத்​து, புதிய வக்பு சட்​டத்​துக்​கான ஒருங்​கிணைந்த மேலாண்மை விதி​களை மத்​திய அரசு கடந்த வெள்​ளிக்​கிழமை அறி​வித்​தது. 17 பக்​கங்​களைக் கொண்ட இந்த விதி​முறை​கள், ‘ஒருங்​கிணைந்த வக்பு மேலாண்மை அதி​காரமளித்​தல் திறன் மற்​றும் மேம்​பாட்டு விதி​கள் 2025′ எனும் பெயரில் அரசிதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, அனைத்து மாநிலங்​களும் வக்பு சொத்​துகளை தேசிய அளவி​லான இணை​யத்​தில் பதிவு செய்ய வேண்​டும். இந்த வக்பு சொத்​துகளை மத்​திய சிறு​பான்​மை​யினர் நல விவ​கார அமைச்​சகத்​தின் ஒரு இணைச் செய​லா​ளர் கண்​காணிக்க உள்​ளார்.

சொத்து பதிவுக்கு பிறகு இணை​யம் சார்​பில் வக்பு மற்​றும் அதன் சொத்​துக்​கும் ஒரு தனித்​து​வ​மான எண் வழங்​கப்​படும். இதற்காக, அனைத்து மாநிலங்​களும் இணைச் செய​லா​ளர் நிலை அதி​காரியை நோடல் அதி​காரி​யாக நியமிக்க வேண்​டும் என்றும் அந்த அறி​விப்​பில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

விதவை மற்​றும் விவாகரத்து பெற்ற பெண்​ணுக்கு ஜீவ​னாம்​சம் மீதான விதி​கள் 1995 சட்​டத்​தின் 108-B பிரி​வின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. இந்​தப் பிரிவு வக்பு (திருத்​தம்) சட்​டம் 2025-ன் படி சேர்க்​கப்​பட்​டது. இது ஏப்​ரல் 8, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இச்​சட்​டப்​படி, விதவை​கள், விவாகரத்து பெற்ற பெண்​கள் மற்​றும் அனாதைகளுக்கு ஜீவ​னாம்​சம் வழங்​கப்​படு​வதை​யும் வக்புக்​கான புதிய இணை​யத்​தில் பதிவு செய்​ய​வும் அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வக்பு சொத்​துகளை பாது​காக்க நியமிக்​கப்​பட்​டுள்ள முத்​தவல்​லிகள் தனது கைப்​பேசி எண் மற்​றும் மின்​னஞ்​சல் உள்ளிட்ட விவரங்​களை​ இந்த இணை​யத்​தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.