2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.! | Automobile Tamilan

குறைந்த விலையில் 43hp பவரை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற 2025 பல்சர் NS400Z விலை ரூ.7,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.1.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக பஜாஜ் ஆட்டோ நிர்ணயம் செய்துள்ளது.

முதல்முறையாக என்எஸ்400 பைக்கினை நாம் தான் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில், தற்பொழுது வந்துள்ள மாடலில் 373cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 43 PS @ 9,500 rpm, டார்க் 35NM ஆக தொடர்ந்து வழங்குஙதுடன் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

மிக முக்கியமாக ஸ்போர்ட் மோடில் மட்டும் இயங்கும் வகையிலான பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டரை பெற்று கூடுதலாக முந்தைய மோடுகளான Road, Off-road மற்றும் Rain ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

பெர்ஃபாமென்ஸ் சார்ந்த மேம்பாடுகளுக்கு ஏற்ப டயர் மற்றும் பிரேக்கிங் சார்ந்தவற்றில் முந்தைய MRF டயர்களுக்கு பதிலாக 110/70-ZR17 (F) மற்றும் 150/60-ZR17 (R) அளவுள்ள அப்பல்லோ ஆல்பா H1 ரேடியல் டயருடன், சின்டர் செய்யப்பட்ட முன் பிரேக் பேட் கவனிக்க தக்க மாற்றமாகும்.

ரைடர்களின் காலுக்கு வெப்பத்தை கடத்தாமல் இருக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரேடியேட்டர், கோல்ட் நிறத்தில் 43 மிமீ USD முன் ஃபோர்க்குகள் மற்றும் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் ஆகியவற்றை பஜாஜ் பல்சர் NS400Z பெற்றுள்ளது.

மற்ற மாற்றங்கள்

  • மணிக்கு 0–60 கிமீ வேகத்தை எட்ட 2.7 வினாடிகளிலும் (முன்பு 3.2 வினாடிகள்)
  • மணிக்கு 0–100 கிமீ வேகத்தை எட்ட 6.4 வினாடிகளிலும் (முன்பு 7.5 வினாடிகள்)
  • அதிகபட்ச வேகம் மணிக்கு 157 கிமீ ஆகும் (மணிக்கு 150 கிமீ வேகத்தில் இருந்து)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.