கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாக​னம் மீது ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். கடலூரில் உள்ள தனி​யார் பள்ளி வேன் நேற்று காலை தொண்​ட​மாநத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த 4 மாணவர்​களை ஏற்​றிக் கொண்டு சென்​றது. மஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஓட்​டுநர் சங்​கர் (47) வேனை ஓட்​டிச் சென்​றார்.

காலை 7.30 மணி அளவில் செம்​மங்​குப்​பம் பகு​தி​யில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்​புரம்​-மயி​லாடு துறை பயணி​கள் ரயில் எதிர்​பா​ராத​வித​மாக மோதி​யது. இதில் வேன் சுக்​குநூறாக நொறுங்​கி, 50 அடி வரை இழுத்​துச் செல்லப்பட்டது.

இந்த விபத்​தில் தொண்​ட​மாநத்​தம் விஜயசந்​திரகு​மார் மகன் நிமிலேஷ் (12), சின்​ன​காட்​டு​சாகை திரா​விடமணி மகள் சாரு​ம​தி(16) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த சாரு​ம​தி​யின் தம்பி செழியன்( 15), நிமிலேஷின் அண்​ணன் விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்​டுநர் சங்​கர் (47) மற்​றும் விபத்​தில் காயமடைந்​தவர்​களை காப்​பாற்ற ஓடிச் சென்​று, மின்​சா​ரம் பாய்ந்​த​தில் பாதிக்​கப்​பட்ட செம்​மங்​குப்​பம் அண்​ணாதுரை (47) ஆகியோரை அங்​கிருந்​தவர்​கள்மீட்​டு, கடலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். சாரு​ம​தி, நிமிலேஷ் உடல்​களை போலீ​ஸார் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கடலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

தகவலறிந்து அரசு மருத்​து​வ​மனை​யில் பள்ளி மாணவர்​களின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் குவிந்து கதறி அழுதனர். இதற்கிடையே, மேல்​சிகிக்​சைக்​காக புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்ட செழியன், அங்கு உயிரிழந்தார். விபத்து காரண​மாக விழுப்​புரம்​ மயி​லாடு​துறை பயணி​கள் ரயில் ஆலபாக்​கத்​தில் 4 மணி நேரம் நிறுத்​தப்​பட்​டது.

அந்த மார்க்​கத்​தில் செல்​லும் திருச்​சி – தாம்​பரம் வாராந்​திர ரயில் சிதம்​பரம் ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தப்​பட்​டது. சேதமடைந்தமின் பாதை மற்​றும் ரயில் பாதைகள் சரி செய்​யப்​பட்ட பின்​னர், அந்த தடத்​தில் ரயில்​கள் இயக்​கப்​பட்​டன. இந்​நிலையில், கடலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை அமைச்​சர் சி.வெ. கணேசன் சந்​தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயி​ரிழந்த மாணவர்​களின் உடல்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

ரூ.5 லட்​சம் நிவாரணம்: விபத்​தில் உயி​ரிழந்த மாணவர்​களின் குடும்​பத்​துக்கு ஆறு​தல் தெரி​வித்​துள்ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.5 லட்​சம், பலத்த காயமடைந்​தவர்​களுக்கு ரூ.1 லட்​சம், லேசான காயமடைந்​தவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் நிவா​ராணம் வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளார்.

கேட் கீப்​பர் கைது: அப்​பகுதி மக்​கள் கூறும்​போது, “ரயிவேல் கேட் மூடா​மல் இருந்​ததால் விபத்து நேரிட்டது. கேட் கீப்​பர் சரி​யான நேரத்​தில் கேட்டை மூடி​யிருந்​தால் இந்த விபத்தை தவிர்த்​திருக்​கலாம். இந்த ரயிலுக்கு முன்பு செல்​லும் திருச்செந்​தூர் எக்​ஸ்​பிரஸ் ரயில் சென்​ற​போதும் ரயில்வே கேட் திறந்​திருந்​தது” என்​றனர். இதற்​கிடையே, கேட் கீப்​ப​ரான உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த பங்​கத் சர்​மாவை (32) பணி​யிடை நீக்​கம் செய்து தெற்கு ரயில்வே உத்​தர​விட்​டது. பின்​னர் அவரை போலீ​ஸார் கைது செய்தனர்.

கடலுார் அரசு மருத்துவமனையின் முன்
கதறி அழும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்.

தெற்கு ரயில்வே விளக்​கம்: தெற்கு ரயில்வே சார்​பில் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில், “முதல்​கட்ட விசா​ரணை​யில், வேன் வந்​த​போது கேட் மூடப்​பட்​டிருந்​ததும், வேன் ஓட்​டுநர் வலி​யுறுத்​தி​ய​தால் கேட் கீப்​பர் ரயில்வே கேட்டை திறந்​ததும் தெரிய​வந்​துள்​ளது. அவரைப் பணியி​லிருந்து நீக்​கு​வதற்​கான நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. லெவல் கிராசிங் பகு​தி​யில் முழு ரயில்வே நிதி​யுத​வி​யுடன் சுரங்​கப் பாதை அமைக்க அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், கடந்த ஓராண்​டாக மாவட்ட ஆட்​சி​யர் அனு​மதி வழங்​க​வில்​லை. இந்த துர​திரு​ஷ்ட​வசமான சம்​பவத்​துக்கு மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறோம். விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் குடு​ம்​பத்​துக்கு தலா ரூ.5 லட்​சம், பலத்த காயமடைந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ரூ.2.5 லட்​சம், மற்​றவர்​களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

ஆளுநர், துணை முதல்வர், தலை​வர்​கள் இரங்கல்: மாணவர்​கள் உயி​ரிழப்​புக்கு ஆளுநர், துணை முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: பள்ளி வேன் மீது ரயில் மோதி​ய​தில் அப்​பாவிக் குழந்​தைகள் உயி​ரிழந்​தது வேதனை அளிக்​கிறது. அவர்​களது குடும்​பங்​களுக்கு நெஞ்​சார்ந்த இரங்​கல். காயமடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய வேண்​டிக் கொள்​கிறேன்.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: பள்​ளிக் குழந்​தைகளின் உயி​ரிழப்பு வேதனையைத் தரு​கிறது. விபத்​தில் பிள்​ளை​களை இழந்து தவிக்​கும் பெற்​றோருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: பள்ளி மாணவர்​கள் உயி​ரிழந்​துள்ள செய்தி அதிர்ச்சி தரு​கிறது. உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ஈடு​கட்ட முடி​யாத இந்த பேரிழப்​பில் இருந்து மீண்​டு​வர, பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு இறைவன் துணை நிற்​கட்​டும்.

இதே​போல, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாமக தலை​வர் அன்​புமணி, திக தலை​வர் கி.வீரமணி, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.