18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் அதிகாரி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை வனத் துறை பெண் அதி​காரி ஒரு​வர் லாவக​மாக பிடித்து அப்​புறப்​படுத்​தும் வீடியோ இணை​யத்​தில் பரவி வரு​கிறது.

கேரள மாநிலம், திரு​வனந்​த​புரத்​தில் உள்ள பெப்​ப​ரா, அஞ்​சுமருது​மூட்​டின் குடி​யிருப்​புப் பகு​திக்கு அரு​கில் நீரோடை செல்​கிறது. இந்த நீரோடைக்கு குளிக்​கச் சென்ற அப்​பகுதி மக்​கள் அதில் நீளமான ராஜ​நாகம் இருப்பதை கண்டு வனத்​துறைக்கு தகவல் தெரி​வித்​தனர். இதையடுத்து பருத்​திப்​பள்ளி வனச்​சரகத்தை சேர்ந்த பெண் அதி​காரி ஜி.எஸ்​. ரோஷிணி சம்பவ இடத்​துக்கு சென்​றார். அவர் ஒரு குச்​சியை பயன்படுத்தி அந்​தப் பாம்பை பிடித்து ஒரு பையில் அடைத்​தார். 18 அடி நீளம் கொண்ட அந்​தப் பாம்பை அவர் பிடிக்​கும் வீடியோ சமூக வலை​தளங்களில் பரவி வரு​கிறது. மிகவும் விஷம் கொண்ட​தாக கருதப்​படும் ராஜநாகத்தை கவனமாககையாண்​டு, அதை பிடித்த ரோஷிணிக்கு பாராட்டுகுவிந்து வரு​கிறது. ரோஷிணி தனது 8 ஆண்டு கால பணி அனுபவத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்ட பாம்​பு​களை பிடித்​துள்​ளார். மிக அரி​தான ராஜ​நாகத்தை பிடித்​தது இதுவே முதல்​முறை என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.