சென்னை: உள்ளாட்சியில் குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது, உள்ளாட்சியில் நல்லாட்சி’ என திமுகஅரசு கூறுவது வெறும் வெற்று விளம்பரம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரிவிதிப்பு முறைகேடை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர். ‘உள்ளாட்சிகளில் நல்லாட்சி’ என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என கூறி உள்ளார். இதுதொடர்பாக […]
