தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை

நாக்பூர்: தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில் அவர் இவ்​வாறு கூறி​யிருப்​பது பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளி​யீட்டு விழா நாக்​பூரில் 9-ம் தேதி நடை​பெற்​றது. ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கலந்​து​கொண்​டு, புத்​தகத்தை வெளி​யிட்​டார். விழா​வில் அவர் பேசும்​போது, ‘‘உங்​களுக்கு 75 வயது ஆகிறது என்​றால், நீங்​கள் ஒதுங்​கிக் கொண்டு மற்​றவர்​களுக்கு வழி​விட வேண்​டும்’’ என்​றார்.

வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்​டிக்​காட்​டியே, மோகன் பாகவத் இவ்​வாறு கூறிய​தாக எதிர்க்​கட்​சிகள் தெரி​வித்​துள்​ளன. அவரது கருத்து பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடிக்கு செப்​டம்​பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது என்​பதை மோகன் பாகவத் மிக அழகாக நினை​வுபடுத்தி உள்​ளார். அதே​நேரம், மோகன் பாகவத்​துக்கு செப்​டம்​பர் 11-ம் தேதி 75 வயது ஆகிறது. இதே கருத்தை அவரிட​மும் பிரதமர் மோடி சொல்​லலாம். எப்​படியோ.. ஓர் அம்​பு, இரு இலக்​கு​கள்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2014 மக்​களவை தேர்​தலுக்கு பிறகு, பாஜகவில் 75 வயது ஆகும் தலை​வர்​களுக்கு ஓய்வு அளிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், மூத்த தலை​வர்​கள் அத்​வானி, முரளி மனோகர் ஜோஷி உள்​ளிட்​டோருக்கு ஓய்வு அளிக்​கப்​பட்​டது. குஜ​ராத் முதல்​வ​ராக இருந்த ஆனந்தி பென், மத்​திய அமைச்​சர​வை​யில் இருந்த நஜ்மா ஹெப்​துல்லா ஆகியோர் 75 வயதை எட்​டியதும் பதவியை ராஜி​னாமா செய்​தனர். கடந்த 2019 மற்​றும் 2024 மக்​களவை தேர்​தலின்​போது 75 வயதை எட்​டிய தலை​வர்​களுக்கு பாஜக​வில் சீட் வழங்​கப்​பட​வில்​லை.

இந்த விவ​காரம் குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: கடந்த 2022-ல் பாஜக மூத்த தலை​வர் எடியூரப்​பா, கட்​சி​யின் தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக நியமிக்​கப்​பட்​டார். அப்​போது அவருக்கு 79 வயது. அவர் 75 வயதை தாண்​டிய பிறகும் கர்​நாடக முதல்​வ​ராக பதவி வகித்​தார். பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக 76 வயதான சத்​தி​ய​நா​ராயண் ஜாதியா நியமிக்​கப்​பட்​டார். 75 வயதில் ஓய்வு பெற வேண்​டும் என்று பாஜக​வில் அதி​காரப்​பூர்​வ​மாக எந்த விதி​யும் கிடை​யாது. வரும் 2029 மக்​களவை தேர்​தலிலும் மோடியே பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​படு​வார் என்று மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்ட பாஜக தலை​வர்​கள் ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி உள்​ளனர்​. இவ்​வாறுஅவர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.