சென்னை: அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பாஜக இடையே, இருந்த கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலோடு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இருதரப்பும் தனித்தனியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட நிலையில், பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, இரண்டு ஆண்டு கால பிரிவுக்கு பிறகு, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற […]
