ஏர் இந்தியா விமான விபத்துக்கு மென்​பொருள் கோளாறாக இருக்கலாம்: அமெரிக்க நிபுணர் கருத்து

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்​துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரண​மாக இருக்​கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரி​வித்​துள்​ளார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத்​தின் அகம​தா​பாத் விமான நிலை​யத்​தில் இருந்து பிரிட்​டிஷ் தலைநகர் லண்​ட​னுக்கு புறப்பட்ட ஏர் இந்​தியா விமானம் 2 நிமிடங்​களில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் 241 பேர் உயி​ரிழந்​தனர். பிரிட்​டனை சேர்ந்த விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்​டும் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் பிழைத்​தார்.

இந்த விமானம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் மாணவர் விடுதி மீது மோதி​யதால் 29 பேர் உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்​த​மாக அகம​தா​பாத் விமான விபத்​தில் 270 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து தொடர்​பாக விமான விபத்து புல​னாய்வு அமைப்​பின் (ஏஏஐபி) சிறப்​புக் குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இதில் இந்​திய விமானப் படை​யின் மூத்த விமானிகள், அமெரிக்க தேசிய பாது​காப்பு வாரி​யத்​தின் தொழில்​நுட்ப வல்​லுநர்​கள், ஐ.நா. சபை​யின் சர்​வ​தேச விமான போக்​கு​வரத்து கழகத்​தின் வல்​லுநர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர். விமானத்​தின் கருப்பு பெட்​டி​யில் இருந்து பெறப்​பட்ட தகவல்​கள், உயிர் பிழைத்த பயணி​யின் சாட்​சி அடிப்​படை​யில் சிறப்பு குழு முதல் கட்ட விசா​ரணை நடத்தி விமான போக்​கு​வரத்து துறை​யிடம் சில நாட்​களுக்கு முன்பு சமர்ப்​பித்தது.

அந்த அறிக்​கையை அடிப்​படை​யாக வைத்து அமெரிக்​காவை சேர்ந்த வால் ஸ்டிரீட் ஜர்​னல் நாளிதழ் வெளியிட்ட சிறப்பு செய்​தியில் கூறி​யிருப்​ப​தாவது: அவசர நிலை காலத்​தில் விமானத்​தின் இன்​ஜின்​கள் அணைக்​கப்​பட்​டு, மீண்​டும் இயக்​கப்​படு​வது வழக்​கம். இதற்​காக விமானத்​தின் பெட்​ரோல் சுவிட்​சுகளை விமானிகள் அணைத்​து, மீண்​டும் இயக்​கு​வார்​கள்.

அகம​தா​பாத்​தில் விபத்​துக்​குள்​ளான ஏர் இந்​தியா விமானத்​தின் பெட்​ரோல் சுவிட்​சுகள் அணைக்​கப்​பட்​டு, இரு இன்​ஜின்​களும் செயல் இழந்​துள்​ளன. இதுவே விபத்​துக்கு காரண​மாக இருக்​கக்​கூடும். இவ்​வாறு வால் ஸ்டிரீட் ஜர்​னல் நாளிதழில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்​திய விமான போக்​கு​வரத்​துத் துறை நிபுணர் கேப்​டன் ராகேஷ் ராய் கூறிய​தாவது: எந்​தவொரு விமானி​யும் விமா னத்​தின் எரிபொருள் சுவிட்சை தவறாக கையாள மாட்​டார். ஏர் இந்​தியா விமானத்​தில் ஏதாவது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டிருக்​கக்​கூடும். இதன்​காரண​மாகவே எரிபொருள் சுவிட்சை அணைத்​து, மீண்​டும் இயக்​கி​யிருக்க கூடும்.

விமான விபத்து ஏற்​பட்ட ஒரு மாதத்​துக்​குள் முதல் கட்ட அறிக்​கையை பொது தளத்​தில் வெளி​யிட வேண்​டும். இதன்​படி ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான முதல்​கட்ட அறிக்கை இணை​யத்​தில் வெளி​யிடப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அந்த அறிக்கை வெளி​யா​னால் கூடு​தல் தகவல்​களை தெரிந்து கொள்ள முடி​யும். அடுத்த 3 மாதங்​களில் விரி​வான விசா​ரணை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும். அதில் விபத்​துக்​கான உண்​மை​யான காரணங்​கள் ஆதா​ரங்​கள் நிரூபிக்​கப்​படும். இவ்​வாறு கேப்​டன் ராகேஷ் ராய் தெரி​வித்​தார்.

அமெரிக்​காவை சேர்ந்த விமான போக்​கு​வரத்து துறை நிபுணர் மேரி ஷியாவோ கூறிய​தாவது: டிசிஎம்ஏ என்​பது போயிங் விமானத்​தின் தொழில்​நுட்ப கோளாறுகளை கண்​டறி​யும் மென்​பொருள் ஆகும். விமானத்​தில் ஏதாவது கோளாறு ஏற்​பட்​டால் டிசிஎம்ஏ மூலம் சரிசெய்​யப்​படு​வது வழக்​கம். விமானத்​தின் வேகம், இன்​ஜினின் இயக்​கத்தை டிசிஎம்ஏ கட்​டுப்​படுத்​துகிறது. விபத்​துக்​குள்​ளான ஏர் இந்​தியா விமானத்​தின் டிசிஎம்ஏ மென்​பொருளில் கோளாறு ஏற்​பட்​டிருக்​கக்​கூடும் என்று சந்​தேகிக்​கிறோம்.

அதாவது விமானம் தரை​யில் இருப்​ப​தாக கருதி இரு இன்​ஜின்​களின் இயக்​கத்​தை​யும் டிசிஎம்ஏ நிறுத்​தி​யிருக்​கக்​கூடும். இதன்​காரண​மாக வி​மானம் கீழே விழுந்​து நொறுங்​கி​யிருக்​கும். இது​போன்​ற விபத்​துகள்​ ஏற்​கெனவே நேரிட்​டு உள்​ளன. இவ்​வாறு மேரி ஷி​யாவோ தெரிவித்​துள்​ளார்​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.