“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செஞ்சி கோட்டை தமிழ்நாட்டில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டை. இது விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூன்று மலைகளை உள்ளடக்கிய இந்த கோட்டை, முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ராஜகிரி மற்றும் சஹ்லிதுர்க் […]
