கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக உள்ளது, காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் உள்ள வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெறுவதுடன், சென்னை மக்களின் குடி நீர் தேவையையும்பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். ஏரிக்கு, காவிரி […]
