சென்னை: இன்று மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வாயிலாக சுமார் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு சுமார் 14லட்சம் பேர் (13,89,738 ) போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு அரசின் விஏஓ, வனத்துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னையின் பல பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை கண்டுபிடிக்க தேர்வர்கள் […]
