திருச்சி இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி செல்கிறார். தமிழக அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சிக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. […]
