ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.! | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா VX2 வரிசையில் உள்ள ஆரம்ப நிலை Go வேரியண்டுக்கு போட்டியாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஐக்யூப் 2.2Kwh, பஜாஜ் சேட்டக் 3001, ஓலா S1X 2kwh ஆகிய மாடல்களின் விலை, ரேஞ்சு, சிறப்புகள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இங்கே வழங்கப்பட்டுள்ள ஒப்பீடுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நான்கு மாடல்களும் ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக அமைந்திருப்பதுடன் தோராயமாக உண்மையான ரேஞ்சு ஈக்கோ மோடு எனப்படுகின்ற குறைந்த வேகத்தில் பயணிக்கின்ற பொழுது 70 முதல் 90 கிமீ வரையிலான பயணத்தை வழங்குகின்றது.

Vida VX2 Go Vs Iqube 2.2 Vs Chetak 3001 Vs Ola S1X 2kwh

அம்சம் VX2 Go iQube 2.2 Chetak 3001 Ola S1X 2kWh
ரேஞ்ச் (IDC) 92 கிமீ 94 கிமீ 127 கிமீ 108 கிமீ
உண்மையான ரேஞ்ச் 72 கிமீ 75 கிமீ 90 கிமீ 65 கிமீ
பேட்டரி 2.2 kWh 2.2 kWh 3.0 kWh 2 kWh
பவர் 6 kW 4.4 kW 4.0 kW 7 kW
டார்க் 140 Nm
டாப் ஸ்பீடு 70 75km/hr 63km/hr 101km/hr
சார்ஜிங் நேரம் (0-80%) 2 மணி 41 நிமிடம் 2 மணி 45 நிமிடம் 3 மணி 50 நிமிடம் 4.5 மணி நேரம்
ரைடிங் மோடு  ECO & Ride Eco & Power  Eco & Sport  Eco, Normal & Sport

ரேஞ்ச் என்பது டிரைவிங் அனுபவம், வேகம்,டயர் பிரெஷர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கொண்டு மாறுபடுகின்றது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள உண்மையான ஈக்கோ மோடில் குறைந்தபட்ச வேகத்தில் பயணிக்கும் பொழுது கிடைக்கின்றது.

குறிப்பாக, வசதிகளை இந்த ஸ்கூட்டர்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கின்ற விஎக்ஸ்2 கோ 1 மணி நேரத்தில் 0-80% சார்ஜிங் செய்ய முடியும், இந்த ஸ்கூட்டர்களில் கூடுதல் பேட்டரி திறனை பெற்றுள்ள சேட்டக் 3001 மாடல் தோராயமாக 90 கிமீ வழங்குகின்ற நிலையில், போட்டியாளர்களை விட குறைந்த வேகம் மணிக்கு 63 கிமீ ஆகவும், அதிகபட்ச வேகத்தை ஓலா எஸ்1எக்ஸ் 101 கிமீ மணிக்கு எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்யூப் மாடல் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குடன் 7அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் 30 லிட்டர் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்டோரேஜ் பிரிவில் VX2 மாடல் 33.2 லிட்டர், சேட்டக் 3001 மாடல் 35 லிட்டர் பெற்றுள்ளது.

Hero Vida VX2 Go Vs Iqube 2.2 Vs Chetak 3001 Vs Ola S1X 2kwh Price

ஸ்கூட்டர் மாடல் எக்ஸ்-ஷோரூம் ஆன்-ரோடு
Hero Vida VX2 Go ரூ.94,940 ரூ.1,02,654
TVS iQube 2.2 ரூ.1,02,470 ரூ.1,11,654
Bajaj Chetak 3001 ரூ.94,900 ரூ.1,02,432
Ola S1X 2kWh ரூ.91,999 ரூ.99,654

குறிப்பாக இந்த ஸ்கூட்டர் வரிசையில் விடா விஎக்ஸ் 2 கோ மாடலுக்கு விலை ரூ.10,000 வரை குறைவாகவும், அதே நேரத்தில் BAAS திட்டத்தின் மூலம் ரூ.44,990 எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைப்பது மிகப்பெரிய பலமாகும். மேலும், விஎக்ஸ்2 BAAS  திட்டம் இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் செலுத்தினால் பேட்டரி முழுவதுமாக சொந்தமாகிவிடும்.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.