2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம்

பாட்னா: வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை, மாநிலத்​தில் 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன, ஒட்​டுமொத்த அளவில் 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு நிச்​சய​மாக எட்​டப்​படும்.

இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்​டு​களுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை வழங்​கு​வதன் மூலம் இலக்கை இரட்​டிப்​பாக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனை அடைய தனி​யார் துறை அதி​லும் குறிப்​பாக தொழில்​துறை பிரிவு​களில் புதிய வேலை வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும். இதற்​காக ஒரு உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு நிதிஷ் குமார் கூறியுள்​ளார்.

பிஹார் மாநில தேர்​தல் இந்த ஆண்டு இறு​தி​யில் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனினும், இதற்​கான கால அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யும் இன்​னும் அறிவிக்​க​வில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.