இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி தொடர்​பான தகவல்​களை திரட்​டியது. இதன்​படி, இந்த மோசடிகள் பெரும்​பாலும் பாதுகாப்புமிக்க இடங்​களில் இருந்து நடத்​தப்​படு​வதும், சீன நிறு​வனங்​களால் கட்​டுப்​படுத்​தப்​படு​வதும் தெரிய​வந்​துள்​ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்​தப்​பட்ட பகுப்​பாய்​வில், இது​போன்ற குற்​றங்​களால் மாதந்​தோறும் இந்​தி​யர்​கள் ரூ.1,000 கோடியை இழப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்​டின் முதல் 5 மாதங்​களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு இணைய வழி​யில் மோசடி நடந்​துள்​ளது. இதில் பாதிக்​கும் மேற்​பட்ட தொகை, மியான்​மர், கம்​போடி​யா, வியட்​நாம், லாவோஸ் மற்​றும் தாய்​லாந்து ஆகிய நாடு​களில் இருந்து மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “கடந்த ஜனவரி மாதத்​தில் ரூ.1,192 கோடி, பிப்​ர​வரி​யில் ரூ.951 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.1,000 கோடி, ஏப்​ரல் மாதத்​தில் ரூ.731 கோடி, மே மாதத்​தில் ரூ.999 கோடி மோசடி நடை​பெற்​றுள்​ளது” என்​றார்.
சமீபத்​தில் இந்​தியா வந்​திருந்த கம்​போடி​ய உயர் அதி​காரி​கள், டெல்​லி​யில் உயர் அதி​காரி​களை சந்​தித்​துப் பேசினர். அப்​போது, கம்​போடி​யா​விலிருந்து நடை​பெறும் இணைய மோசடி குறித்து நடவடிக்கை எடுக்​கு​மாறு இந்​திய அதி​காரி​கள் வலி​யுறுத்​தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.