சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

பெய்ஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.

வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறையாகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால். கோபம் அடைந்த பாகிஸ்தான் சீனாவிடம் உதவியை நாடியுள்ள சூழலில், ஜெய்சங்கரின் சீன சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர். அந்நாட்டு துணை அதிபர் வாங்கிஷனை நேற்று சந்தித்து பேசினார். துணை அதிபர் இல்லம் சென்ற மந்திரி ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று தொடங்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலாசாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பை அதிகரிப்பது குறித்து இந்த 3 நாள் மாநாட்டில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஸ்சிஓ வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக எக்ஸ் தள பதிவில் ஜெய்சங்கர் கூறியதாவது:-

இன்று காலை பெய்ஜிங்கில் எனது சக எஸ்சிஓ வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் சீன அதிபர் ஜு ஜின்பிங்கை சந்தித்தேன். மாநாடு தொடங்குவதை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றம் குறித்து அதிபர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் சீன பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஜெய்சங்கர் சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.