ஜூலை 17 ., கைனெடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.! | Automobile Tamilan


kinetic dx electric

இந்தியாவின் ஆரம்பகால ஸ்கூட்டர் சந்தையின் முன்னோடிகளில் ஒன்றான 2-ஸ்ட்ரோக் கைனெடிக்-ஹோண்டா DX மாடலின் உந்துதலில் கைனெடிக் க்ரீனின் முயற்சியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு ஜூலை 17 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஏற்கனவே பிரபலமான E-Luna மாடலை வெளியிட்டிருந்த நிலையில், அடுத்த 18 மாதங்களில் 3 ஸ்கூட்டர்களை பேட்டரியில் இயங்கும் வகையில் வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

Kinetic DX Electric

இந்நிறுவனம் முன்பே இத்தாலியின் Torino Design உடன் இணைந்து ஸ்கூட்டர்களை வடிமைப்பினை மேற்கொண்டு வரும் நிலையில் வரவுள்ள புதிய டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.8 kWh முதல் 3 kWh வரை பேட்டரி இருக்கும் எனவும், இந்த மாடல் மணிக்கு அதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், இருக்கைக்கு அடியில் பெரிய  சேமிப்பிடத்தையும் கொண்டிருக்கும் என இந்நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

சமீபத்தில் வெளியான சோதனை ஓட்ட படங்களில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு, பின்புறத்தில் டிரம் உடன் ஹப் மோட்டார் பெற்றதாக அமைந்துள்ளது. மிக அகலமான டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றிருக்கலாம்.

விலை அனேகமாக ரூ.1 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மேலதிக விபரங்களை ஜூலை 17ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.

Related Motor News

No Content Available

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.