இந்தியாவில் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் மாடல் Y விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரூ.59,89,000 முதல் ரூ.67,89,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் டெஸ்லாவின் புகழ்பெற்ற ஆட்டோ பைலட் அம்சத்தை பெற மாடல் Yக்கு கூடுதலாக ரூ.6 லட்சத்திற்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ள நிறத்தை பொறுத்து ரூ.95,000 முதல் ரூ.1.85 லட்சம் வரை அமைந்துள்ளது.
முதற்கட்டமாக மும்பை நகரில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் டெல்லி மற்றும் குருகிராம் பகுதியில் கிடைக்க உள்ளது.
Tesla Model Y
ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கிமீ ஆக எட்டுகின்றது 500 கிமீ WLTP ரேஞ்ச் உறுதிசெய்யப்பட்டுள்ள மாடலில் 0 முதல் 100 கிமீ வேகத்தை 5.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.
லாங் ரேஞ்ச் வேரியண்டில் 622 கிமீ WLTP ரேஞ்ச் உறுதிசெய்யப்பட்டுள்ள மாடலில் 0 முதல் 100 கிமீ வேகத்தை 5.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. ஆனால் இந்தியாவில் AWD வேரியண்ட் வெளியிடப்படவில்லை.
15.3-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் சிஸ்டத்தை பெற்று 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 8-இன்ச் பின்புற டச்ஸ்கிரீன், சுற்றுப்புற விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப் பெற்றுள்ளது.
4 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வாகனத்துக்கான வாரண்டி வழங்கப்படும் நிலையில், இதற்கிடையில், பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்டவைக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,92,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது.