Kia Carens Clavis EV Price – ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது


kia carens clavis ev price

கியா நிறுவனம் இந்தியாவில் தயாரித்துள்ள முதல் Carens Clavis EV எலக்ட்ரிக் எம்பிவி மாடல் விலை ரூ.17.99 லட்சம் முதல் ரூ.24.49 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ICE ரகத்தில் கிடைக்கின்ற கேரன்ஸ் கிளாவிஸ் மாடலின் அடிப்படையிலான பெரும்பாலான டிசைன் அம்சங்களை பகிர்ந்த் கொள்ளுகின்ற கிளாவிஸ் இவி காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரு பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது.

Kia Carens Clavis EV

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் காரில் உள்ள பேட்டரி ஆப்ஷனை பகிர்ந்து கொள்ளுகின்ற காரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் 42Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 99Kw பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 404 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் போதுமானதாகும்.

ER 51.4Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 126Kw பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 490 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் 45 நிமிடங்கள் போதுமானதாகும்.

Kia Carens Clavis EV விலைப்பட்டியல்

Kia Carens Clavis EV HTK+ Standard Range- Rs. 17.99 lakh

Kia Carens Clavis EV HTX Standard Range- Rs. 20.49 lakh

Kia Carens Clavis EV HTK+ Long Range- Rs. 22.49 lakh

Kia Carens Clavis EV HTX+ Long Range- Rs. 24.49 lakh

முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ள நிலையில் டெலிவரி உடனடியாக துவங்கப்பட உள்ளது.

7 இருக்கை பெற்ற கிளாவிஸ் எலக்ட்ரிக் காரில் இரட்டை 12.3-இன்ச் டிஸ்பிளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று கூடுதலாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8-ஸ்பீக்கர் Bose ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

அனைத்து வகைகளிலும் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஸ்டெபிலிட்டி புரோகிராம், வேக உணர்திறன் கதவு லாக், ISOFIX குழந்தை இருக்கை மவுண்டிங் பாயின்ட் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட்கள் உள்ளன.

 

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.