பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “ நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். அவர் எனக்கு ‘லியோ’ படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார் என சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.

இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த சம்பவத்திற்குப் பிறகு சஞ்சய் சார் எனக்கு போன் பண்ணினார். ‘நான் வேடிக்கையாகதான் அந்த கருத்தைச் சொன்னேன்.
ஆனால் அதை சமூக ஊடகங்களில் பெரிதாக்கிவிட்டார்கள். எனக்கு அது சங்கடமாக இருக்கிறது’ என சஞ்சய் சார் என்னிடம் கூறினார். நான், ‘பிரச்சினை இல்லை சார்’ என்று சொன்னேன். நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல.

நான் என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்” என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…