சிறுபான்மை வாக்கை பிரிக்க விஜய்யை களமிறக்கும் பாஜக: அப்பாவு கருத்து

திருநெல்வேலி: சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார்.

நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறு​பான்மை சமூகத்​தைச் சேர்ந்​தவர். இதனால், சிறுபான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜககளமிறக்​கு​கிறது. விஜய் வீட்​டில் நடை​பெற்ற வரு​மான வரிசோதனை குறித்து இது​வரை சரி​யான தகவல்​கள் வெளி​யிட​வில்லை.

வரு​மான வரித்​துறை அதிகாரி​யாக இருந்த அருண்​ராஜுக்​கு, தவெக கட்​சி​யில் பதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. சாத்​தான்​குளம் சம்​பவத்​தில் அப்​போதைய அரசு வழக்​குப்பதிவு செய்​யவே தயங்​கியது. ஆனால், அஜித்​கு​மார் விவ​காரத்​தில் உடனுக்​குடன் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அப்பாவு தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.