6 இருக்கை டெஸ்லா மாடல் Y L எஸ்யூவி அறிமுகமானது | Automobile Tamilan


டெஸ்லா model y l

இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவன மாடல் Y விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சீனாவில் மாடல் Y L  எலக்ட்ரிக் எஸ்யூவி 6 இருக்கைகளை பெற்றதாக விற்பனைக்கு செப்டம்பர் 2025ல் வெளியிடப்பட உள்ளது.

சில படங்களை அதிகாரப்பூர்வமாக டெஸ்லா வெளியிட்டுள்ள நிலையில் சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MIIT) மூலம் வெளியாகியுள்ளது. ஆனால் மற்ற நாடுகள் மற்றும் இந்தியா வருகை குறித்து எந்த தகவலும் இல்லை.

எவ்வாறு மாடல் ஓய் உடன் வேறுபடுகின்றது என்றால் சுமார் 186 மிமீ வரை கூடுதல் நீளத்தை பெற்று 4,976 மிமீ நீளமும், வீல்பேஸ் 150 மிமீ வரை அதிகரித்து 3,040 மிமீ ஆகவும் உயரம் 44மிமீ அதிகரித்துள்ளது. மற்ற முக்கிய மாற்றங்களாக புதிய டிசைன் பெற்ற அலாய் வீல், அதிக பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கும் வகையில் உயரமான பின்புற பகுதி மற்றும் ஸ்பாய்லர் போன்றவற்றுடன் மிக முக்கிய இன்டீரியர் மாற்றம் 6 இருக்கைகளை கொண்டிருக்கும்.

மற்றபடி, பேட்டரி, ரேஞ்ச் தொடர்பான விபரங்கள் விற்பனைக்கு வழும்பொழுது எதிர்பார்க்கலாம். இருந்தாலும் தற்பொழுது சந்தையில் உள்ள ஓய் மாடலை விட கூடுதலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் பேட்டரியை டெஸ்லா ஓய் எல்  பெற வாய்ப்புள்ளது.


tesla model y ltesla model y l


tesla model y l  vs model y vs model xtesla model y l  vs model y vs model x

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.