இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற எம்பிவி ரக மாடலான மாருதி சுசூகி எர்டிகாவில் 6 ஏர்பேக்குகளை பாதுகாப்பு வசதிக்கு சேர்க்கப்பட்டுள்ளதால் விலை ரூ.9.09 லட்சம் முதல் ரூ.13.44 லட்சம் வரை எக்ஸ்-ஷோரும் விலை அமைந்துள்ளது.
மாருதியின் பெரும்பாலான ஆல்டோ கே10, செலிரியோ, வேகன் ஆர், ஈக்கோ, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஜிம்னி மற்றும் இன்விக்டோ கார்களில் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை உறுதிப்படுத்தி வருவதனால், முன்பாக எர்டிகா 4 ஏர்பேக்குகளை மட்டும் கொண்டிருந்த நிலையில் 6 காற்றுப்பைகள் உள்ளதால் விலை அதிகபட்சமாக 1.4% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
2025 Maruti Suzuki Ertiga
மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லாமல் எர்டிகா காரில் 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.31kpl மைலேஜ் வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
CNG-ல் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது.
எர்டிகா விலைப்படியல்
Ertiga Variants | Old Price | New Price |
---|---|---|
LXi (O) | ₹8,96,500 | ₹9,09,051 |
VXi (O) | ₹10,05,500 | ₹10,19,577 |
VXi (O) CNG | ₹11,00,499 | ₹11,15,906 |
ZXi (O) | ₹11,15,500 | ₹11,31,117 |
VXi AT | ₹11,45,500 | ₹11,61,537 |
ZXi+ | ₹11,85,500 | ₹12,02,097 |
ZXi (O) CNG | ₹12,10,501 | ₹12,27,448 |
ZXi AT | ₹12,55,500 | ₹12,73,077 |
ZXi AT | ₹13,25,500 | ₹13,44,057 |
விரைவில், இதனுடைய ரீபேட்ஜிங் ரூமியன் மாடலும் 6 ஏர்பேக்குகளை பெற்றதாக வரக்கூடும், கூடுதலாக பலேனோ மாடல் 6 ஏர்பேக்குடன் 0.5 % விலை உயர்த்தப்பட்டுள்ளது.