Central Governments Big News, Free AI Training : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக மத்திய அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 லட்சம் பேருக்கு விரைவில் இலவச ஏஐ பயிற்சி கொடுக்க உள்ளது. அவர்களுக்கு ஐஆர்சிடிசி சேவை வழங்க அனுமதி கொடுப்பதுடன், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சேவைகளையும் வழங்குவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் எட்டியிருப்பதையொட்டி டெல்லி துவாரகாவில் 10 ஆண்டுகால டிஜிட்டல் இந்தியா சாதனை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசும்போது தான் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, 10 லட்சம் குடிமக்களுக்கு இலவச AI பயிற்சி வழங்கப்படும், கிராம அளவிலான தொழில்முனைவோருக்கு (VLEs) முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். கிராம அளவிலான தொழில்முனைவோர் (VLEs) IRCTC சேவைகளை வழங்கத் தொடங்குமாறு அவர் வலியுறுத்தினார். மாநில IT நிறுவனங்களை பொதுசேவை மையங்கள்-SPV உடன் ஒருங்கிணைக்க முதலமைச்சர்களுடன் பேச உள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
” 2014 ஆம் ஆண்டில், 83,000 CSC மையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, அவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5.50 லட்சமாக வளர்ந்துள்ளது. பொது சேவை மையங்களுடன் முதன்மை வேளாண் கடன் சங்கங்களை (PACS) ஒருங்கிணைப்படும். 74,000 க்கும் மேற்பட்ட பெண் கிராம அளவிலான தொழில்முனைவோர் (VLE) உருவாகியுள்ளனர். நாம் இப்போது செயற்கை நுண்ணறிவின் சகாப்தத்தில் இருக்கிறோம், அது வேகமாக முன்னேறி வருகிறது. காலப்போக்கில், மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, ஒவ்வொரு பொதுசேவை மையமும் ஒரு கிராம அளவிலான தொழில்முனைவோரால் (VLE) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் பொதுமக்களை மையமாகக் கொண்டு அரசின் சேவைகளை வழங்கி உள்ளூரில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என்றும் பாராட்டினார். கிராம அளவிலான தொழில்முனைவோர், ஆதார் சேர்க்கை மற்றும் அப்டேட்கள், PAN அட்டை மற்றும் பாஸ்போர்ட் சேவைகள், வங்கி மற்றும் காப்பீடு, தொலை மருத்துவம் மற்றும் கல்வி சேவைகள், தொலைபேசி சட்டம் மூலம் திறன் மேம்பாடு மற்றும் சட்ட உதவி விவசாய சேவைகள், கிராமீன் இ-ஸ்டோர் (B2B), பயன்பாட்டு பில் பேமெண்ட்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.