வேளாண், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களில் முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: வேளாண் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மேம்​பாட்டு திட்​டங்​களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. மத்​திய அமைச்​சரவை கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது.

இதில் பிரதமரின் தன் தானிய வேளாண் திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் அடை​யாளம் காணப்​படும் 100 மாவட்​டங்​களில், நடப்பு நிதி​யாண்டு முதல் 6 ஆண்டு காலத்​திற்கு செயல்​படுத்​தப்​படும். வேளாண் துறை​யிலும் அது சார்ந்த துறை​களி​லும் விரை​வான வளர்ச்​சியை எட்​டு​வது தொடர்​பாக இத்​திட்​டம் கவனம் செலுத்​தும்.

இத்​திட்​டம், வேளாண் உற்​பத்​தித்​திறனை மேம்​படுத்​துதல், பயிர் பல்​வகைப்​படுத்​தல், நிலை​யான விவ​சாய நடை​முறை​களை ஊக்​கு​வித்​தல், அறு​வடைக்​குப் பிந்​தைய தானிய சேமிப்​புத் திறனை அதி​கரித்​தல், நீர்ப்​பாசன வசதி​களை மேம்​படுத்​துதல், விவ​சா​யிகளுக்​குக் கடன்​கள் கிடைப்​பதை எளி​தாக்​குதல் ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

இந்​தத் திட்​டம், மத்​திய அரசின் 11 துறை​கள், மாநில அரசுகளின் திட்​டங்​கள், தனி​யார் துறை​யினர் ஆகியோரின் கூட்டு ஒத்​துழைப்​புடன், தற்​போது நடை​முறை​யில் உள்ள 36 திட்​டங்​களு​டன் இணைத்து செயல்​படுத்​தப்​படும். குறைந்த உற்​பத்​தித்​திறன், குறைந்த பயிர் சாகுபடி, விவ​சா​யிகளுக்​குக் குறைந்த கடன் வழங்​கல் ஆகியவை உள்ள 100 மாவட்​டங்​கள் அடை​யாளம் காணப்​பட்டு அந்த மாவட்​டங்​ளில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

ஒவ்​வொரு மாநிலம் அல்​லது யூனியன் பிரதேசத்​தி​லும், மாவட்​டங்​களின் எண்​ணிக்கை நிகர பயிர் பரப்​பளவு, நிலங்​களின் பங்கு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட இருக்​கும் மாவட்​டங்​கள் தேர்வு செய்​யப்​படும். எனினும், ஒவ்​வொரு மாநிலத்​திலிருந்​தும் குறைந்​த​பட்​சம் ஒரு மாவட்​டம் தேர்ந்​தெடுக்​கப்​படும். ஆண்​டுக்கு ரூ.24,000 கோடி மதிப்​பில் 6 ஆண்​டு​களுக்கு மேல் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும். இதன் மூலம் நாடு முழு​வதும் 1.7 கோடி விவ​சா​யிகள் பயனடைவர்.

புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி: என்டிபிசி நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான என்​டிபிசி கிரீன் எனர்ஜி நிறு​வனத்​தில் (என்​ஜிஇஎல்) ரூ.20,000 கோடி முதலீடு செய்​ய​வும் மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதன் மூலம் சூரிய மின்​சக்​தி, காற்​றாலை மின்​சக்தி மற்​றும் பசுமை ஹைட்​ரஜன் திட்​டங்​களில் முதலீடு அதி​கரிக்​கும். என்​ஜிஇஎல் நிறு​வனத்​தில் என்​டிபிசி நிறு​வனம் ரூ.7,500 கோடி முதலீடு செய்​துள்​ளது.

நெய்​வேலி லிக்​னைட் கார்​பரேஷனுக்கு (என்​எல்​சி) சொந்​த​மான என்​எல்சி இந்​தியா ரீனீவெபிள்ஸ் (என்​ஐஆர்​எல்) நிறு​வனத்​தில் பசுமை எரிசக்தி திட்​டத்தை விரி​வாக்க ரூ.7,000 கோடி முதலீடு செய்​ய​வும் மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. இத்​திட்​டத்​தின் கீழ் என்​எல்சி நிறு​வனத்​தின் ரூ.6,263 கோடி மதிப்​பிலான புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி கட்​டமைப்​பு​கள் என்​ஐஆர்​எல் நிறு​வனத்​துக்கு மாற்​றப்​படும்.

இங்கு மேற்​கொள்​ளப்​படும் பசுமை எரிசக்தி திட்​டங்​களில் மேலும் ரூ.700 கோடி முதலீடு செய்​யப்​படும். என்​ஐஆர்எல் நிறு​வனம் தற்​போது 1,400 மெகா வாட் திறனுள்ள 7 புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி திட்​டங்​களை நிர்​வகிக்​கிறது. என்​ஐஆர் எல் நிறு​வனம் இனிமேல் என்​எல்சி யின் பிரத்​யேக புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துணை நிறு​வன​மாக இயங்​கும் என மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​தார்.

ஷுபன்ஷு சுக்​லா​வுக்கு வரவேப்பு: சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​திலிருந்து பூமிக்​குத் திரும்​பிய ஷுபன்ஷு சுக்​லாவை வரவேற்று மத்​திய அமைச்​சரவை நேற்று தீர்​மானம் நிறைவேற்​றியது. இந்த சாதனையை சாத்​தி​ய​மாக்​கிய​தில் அயராத முயற்சிகளை மேற்​கொண்ட இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் ​(இஸ்​ரோ), ஒட்​டுமொத்த விஞ்​ஞானிகள் மற்​றும் பொறியாளர்களுக்கு மத்​திய அமைச்​சரவை பாராட்டு தெரி​வித்​தது.

ககன்​யான், இந்​திய விண்​வெளி நிலை​யம் உட்பட விண்​வெளிக்கு மனிதர்​களை அனுப்​பும் இந்​தி​யா​வின் சொந்த லட்​சிய திட்​டங்​களை நோக்​கிய முயற்​சி​யில்​ இது முக்​கிய​மான மைல்கல்​ என தீர்​மானத்​தில்​ குறிப்​பிடப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.