அரக்கோணம் | டேங்கர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

அரக்கோணம்: காஞ்​சிபுரம் – அரக்​கோணம் நெடுஞ்​சாலை​யில் டேங்​கர் லாரி மீது கார் மோதி​ய​தில்ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் தர்​ம​ராய ரெட்டி தெரு​வைச் சேர்ந்​தவர் வெங்​கடேசன் (48). இவர் வீட்​டிலேயே கார் பழுது பார்க்​கும் பணிமனை நடத்தி வந்​தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20).

இந்​நிலை​யில், வெங்​கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோ​ருடன் காரில் கோவிந்​த​வாடி அகரம் பகு​தி​யில் உள்ள ஸ்ரீதட்​சிணா​மூர்த்தி கோயிலுக்கு சென்​றார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து மீண்​டும் அரக்​கோணம் திரும்பினர்.

டயர் வெடித்ததால்… காரை தினேஷ் ஓட்டி வந்​தார். காஞ்​சிபுரம் – அரக்​கோணம் நெடுஞ்​சாலை​யில் பரு​வ​மேடு அருகே வந்​த​போது, காரின் முன்​பக்க டயர் திடீரென வெடித்​த​தில் கட்​டுப்​பாட்டை இழந்த கார் நெடுஞ்​சாலை​யில் தாறு​மாறாக ஓடி, எதிரே அரக்​கோணத்​தில் இருந்து காஞ்​சிபுரம் நோக்கி வந்த டேங்​கர் லாரி மீது பயங்கர​மாக மோதி​யது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்​தில் லதா அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். தகவலறிந்து வந்த போலீ​ஸார் மற்​றும் தீயணைப்பு வீரர்​கள் உயிருக்​குப் போராடிய வெங்​கடேசனை மீட்​டு, அரக்​கோணம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​ வைத்​தனர். அங்​கிருந்து மேல்சிகிச்​சைக்​காக சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் வெங்​கடேசன் உயி​ர் இழந்​தார்.

இதே​போல, அவரது மகன் தினேஷ் காஞ்​சிபுரம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, மேல் சிகிச்​சைக்​காக சென்னை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தார். விபத்து தொடர்​பாக நெமிலி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.