Chennai, ஜூலை 17, 2025: பார்தி ஏர்டெல், பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டணி அமைத்து, தனது 360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் 12 மாதங்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ (Airtel Perplexity AI Free) சந்தாவை இலவசமாக வழங்குகிறது. பெர்ப்ளெக்ஸிட்டி என்பது செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் ஒரு தேடல் மற்றும் பதில் வழங்கும் இயந்திரமாகும். இது பயனர்களுக்கு உரையாடல் நிகழ்நேரத்தில் நேரடி, துல்லியமான மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான பதில்களை வழங்குகிறது. வழக்கமான இணைய பக்கங்களின் பட்டியலிடலிலிருந்து உயர்ந்து, பயனாளிக்கு தேவையான பதிலை சுலபமாகப் புரிந்துகொள்ளும் முறையில் வழங்குகிறது. மேலும், பயனாளர் தேடும் விளைவுகளை மேலும் துல்லியமாக்க, இந்த AI கருவியுடன் தொடர்ந்த உரையாடல் மேற்கொள்ளலாம்.
பெர்ப்ளெக்ஸிட்டி-யில் இலவச பதிப்பும் உள்ளது, இது சக்திவாய்ந்த தேடல் வசதிகளை வழங்குகிறது. ஆனால் பெர்ப்ளெக்ஸிட்டி புரோ பதிப்பு தொழில்முறை பயனாளர்கள் மற்றும் தீவிர தேடலுக்கான பயனாளர்களுக்கான மேம்பட்ட செயல்திறன்களை கொண்டுள்ளது. பெர்ப்ளெக்ஸிட்டி புரோவில் உள்ள அம்சங்கள்: அதிக எண்ணிக்கையிலான தினசரி புரோ தேடல்கள், மேம்பட்ட AI மாதிரிகளுக்கான அணுகல் (எ.கா., GPT-4.1, கிளாட்), தேர்ந்தெடுக்கக்கூடிய மாதிரிகள், ஆழமான ஆராய்ச்சி வசதி, பட உருவாக்கம், கோப்புகளை பதிவேற்றுதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், பெர்ப்ளெக்ஸிட்டி லாப்ஸ் எனும் சிறப்பான கருவி – புதிய எண்ணங்களை செயல்படுத்த உதவும். இந்த பெர்ப்ளெக்ஸிட்டி புரோ சேவையின் ஆண்டு சந்தா உலகளவில் ரூ.17,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்ஸிட்டி புரோ சந்தா, தற்போது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் (மொபைல், வைஃபை மற்றும் DTH) அனைவருக்கும் ஒரு வருடத்திற்காக இலவசமாக வழங்கப்படுகிறது. இது பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்படுத்திய முதல் கூட்டணியாகும். இந்த சலுகையை பெற, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் உள்நுழைந்து பயன்பெறலாம்.
இந்த கூட்டணியைப் பற்றி கருத்து தெரிவித்த பார்தி ஏர்டெலின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கோபால் விட்டல் கூறியதாவது: “பெர்ப்ளெக்ஸிட்டி உடன் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கூட்டணியை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. முன்னேறிய AI திறன்களை, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கே பிரத்யேகமாக கொண்டு வருகிறோம். இந்த ஒத்துழைப்பு, சக்திவாய்ந்த மற்றும் நேரடி அறிவுப் பொக்கிஷத்தை, எவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில், எந்த கூடுதல் கட்டணமுமின்றி வழங்குகிறது. இந்தியாவில் இவ்வகை முதல் தலைமுறை AI (Gen-AI) கூட்டணியான இது, நவீன டிஜிட்டல் உலகத்தில் உருவாகும் புதிய டிரென்டுகளை எளிதாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.”
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் – பெர்ப்ளெக்ஸிட்டி இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது: “இந்த கூட்டணி, துல்லியமான, நம்பகமான மற்றும் தொழில்முறை தரம் வாய்ந்த AI ஐ இந்தியாவின் மேலும் பலரும் அணுகக்கூடிய வகையில் கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த வழியாகும் — மாணவர், பணிபுரியும் நிபுணர் அல்லது வீட்டு நிர்வாகத்தை மேற்கொள்பவர் என யார் இருந்தாலும், அனைவருக்கும் இது பலனளிக்கிறது. பெர்ப்ளெக்ஸிட்டி புரோ மூலம், பயனர்கள் தகவல்களை எளிதாகத் தேடவும், கற்றுக்கொள்ளவும், மேலும் பலவற்றைச் செய்யவும் ஒரு புத்திசாலியான மற்றும் எளிமையான வழியைப் பெறுகிறார்கள்.” என கூறினார்
*பயனாளர் நன்மை தற்போதைய பெர்ப்ளெக்ஸிட்டி புரோ AI சந்தாவைப் பொறுத்தது, இது 1 வருடத்துக்கு செல்லுபடியாகும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.