வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டெனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.
இந்தியர்கள் கை விலங் கிட்டு நாடு கடத்தப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதியில் இருந்து இம்மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை அமெரிக்காவில் இருந்து இதுவரை 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக செய்தி தொடர்பாளர் ரந்தீஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் இருந்து 15 ஆ யிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.