5 ஆண்​டு​களில் வெளிநாடுகளில் பதுங்கி இருந்த 134 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: சிபிஐ

புதுடெல்லி: இந்​தி​யா​வில் குற்​றச் செயல்​களில் ஈடு​படும் சமூக விரோ​தி​கள், பொருளா​தார குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​வது அதி​கரித்து வரு​கிறது. இன்​டர்​போல் உதவி​யுடன் அவர்​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​கின்​றனர்.

இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் கூறிய​தாவது: வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​லும் குற்​ற​வாளி​கள் குறித்து இன்​டர்​போல் உதவி​யுடன் சிவப்பு நோட்​டீஸ் வெளி​யிடப்​படு​கிறது. இதன்​படி 195 நாடு​களில் குற்​ற​வாளி​கள் தீவிர​மாக தேடப்​படு​வார்​கள். எந்த நாட்​டில் குற்​ற​வாளி​கள் பதுங்கி உள்​ளனர் என்​பது இன்​டர்​போல் உதவி​யுடன் கண்​டு​பிடிக்​கப்​படும். இதன்​பிறகு சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த சட்​டரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும். கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் பல்​வேறு நாடு​களில் பதுங்கி இருந்த 134 குற்​ற​வாளி​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு உள்​ளனர்.

பஞ்​சாப் நேஷனல் வங்​கி​யில் ரூ.13,000 கோடி மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் நீரவ் மோடி கடந்த 2019-ம் ஆண்​டில் பிரிட்​டன் தலைநகர் லண்​டனில் கைது செய்​யப்​பட்​டார். அவரை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​து​வது தொடர்​பாக அந்த நாட்டு நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதே வழக்​கில் தொடர்​புடைய நீரவ் மோடி​யின் தம்பி நேகல் மோடி அண்​மை​யில் அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். அவரை இந்​தி​யா​வுக்கு கொண்டு வர அந்த நாட்டு நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இந்​தி​யா​வில் குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்ட 65 பேர் அமெரிக்​கா​வில் பதுங்கி உள்​ளனர். அவர்​களை கைது செய்து இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசிடம் கோரப்​பட்டு உள்​ளது. சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் நாடு​கள் இந்​தி​யா​வுடன் இணக்​க​மாக செயல்​படு​கின்​றன. அந்த நாடு​களில் இருந்து ஏராள​மான குற்​ற​வாளி​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு உள்​ளனர்.இவ்​வாறு சிபிஐ அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.