வாஷிங்டன்,
இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகளை உள்ள–டக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நிலையில் டிரம்ப் கூறியதாவது:-
பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை.பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். பிரிக்ஸ் அமைப்பு விரைவில் மங்கி மறைந்து போகும் என்றார்.
Related Tags :