சென்னை: மறைந்த மு.க. முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மு.க. முத்துவின் சகோதரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் […]
