சியோல்,
தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கியோங்கி மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, கனமழை நீடித்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :