சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக இதுவரை 261 தொழிற்சாலைகள் மூடி உள்ளதாகவும், ரூ.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை பிரதேசங்களான ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஊட்டியில் கடந்த மே […]
