லண்டனில் உள்ள இஸ்கான் கோயில் (ஸ்ரீ கிருஷ்ணா கோயில்) கோவிந்தா உணவகத்தில் ஒரு நபர் கோழிக்கறி சாப்பிட்டு பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்தச் செயலைச் செய்தவர் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான சான்சோ என்று கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோவிந்தா உணவகத்திற்குள் நுழைந்த அந்த இளைஞன், அங்கிருந்த ஊழியர்களிடம், “இங்கே இறைச்சி கிடைக்குமா?” என்று கேட்டார். “எனக்கு இறைச்சி வேண்டும்” என்று கேட்டார். இதற்கு ஊழியர்கள் […]
