Sarfraz Khan Weight Loss: கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த சர்பராஸ் கான். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து சர்வதேச அரங்கிலும் கலக்கினார். அவர் இதுவரை இந்தியாவுக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 371 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களும் அடங்கும். இவர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட நிலையில், துருதிஷ்டவசமாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய தேர்வுக்குழு இவருக்கு பதிலாக கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனை தேர்வு செய்தது. 27 வயதான இவர் நீண்ட காலமாக தனது உடல் எடை குறித்து பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் சப்ராஸ் கானின் பேட்டிங் ஃபார்மில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரது உடல் தகுதி குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அவர் 2 மாதங்களில் 17 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த மாற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய ஏ அணியில் இருந்தும் நீக்கம்
ஜூன் மாதம் தொடக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் சர்ப்ராஸ் கான் இடம் பெற்றிருந்தார். அங்கு அவர் முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் 92 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் ஐபிஎல் தொடரை முடித்து இங்கிலாந்து திரும்பிய கே.எல். ராகுல் இடம் பிடித்தார்.
சர்ப்ராஸ் கானின் எடை இழப்பு பயணம்
கடந்த இரண்டு மாதங்களாகவே கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் கான் எடை இழப்பு பயணத்தில் இருந்து வருகிறார். அவரின் கடின உழைப்புக்கு பின்னர் அவர் 17 கிலோ உடல் எடையை குறைத்து எடை இழப்பு பயணத்தில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த மே மாதம் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த சர்ப்ராஸ் கானின் தந்தை நெளஷாத் கான் எடை இழப்பு குறித்து பேசி இருந்தார்.
நாங்கள் எங்கள் உணவை நிறைய கட்டுப்படுத்தியுள்ளோம். ரொட்டி, சாதம் போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம். 1 முதல் 1.5 மாதங்களாக வீட்டில் ரொட்டி அல்லது சாதம் சாப்பிடுவதில்லை. நாங்கள் சிக்கன், கேரட், வெள்ளரி, சாலட் மற்றும் பச்சை காய்கறி சாலட் சாப்பிடுகிறோம். அதனுடன், நாங்கள் கிரில் செய்யப்பட்ட மீன், கிரில் செய்யப்பட்ட சிக்கன், வேகவைத்த சிக்கன், வேகவைத்த முட்டை போன்றவற்றையும் சாப்பிடுகிறோம்.
நாங்கள் கிரீன் டீ மற்றும் கிரீன் காபியையும் சாப்பிடுகிறோம். நாங்கள் அவகேடோவையும் சாப்பிடுகிறோம். ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், நாங்கள் ரொட்டி மற்றும் அரிசி சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம். நாங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம். மைதா (மாவு) மற்றும் பேக்கரி பொருட்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம்,” என அவர் கூறினார்.
மேலும் படிங்க: மாபெரும் சாதனையை படைக்க இருக்கும் கே.எல்.ராகுல்.. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் நிகழ்த்துவாரா?
மேலும் படிங்க: மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு வரும் முக்கிய பெளலர்.. முழு விவரம்!