மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை

புதுடெல்லி: 2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வரும் ஜூலை 24 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க ஒப்புக்கொண்டது. மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விஷயத்தின் அவசரத்தைக் காரணம் காட்டி உடனடியாக விசாரிக்க கோரியதை அடுத்து நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

முன்னதாக, கடந்த 2006-ம் ஆண்டு 189 பேர் உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு நீதி​மன்​றம் விதித்த ஆயுள், மரண தண்​டனை ரத்து செய்​யப்​பட்​டது.

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்​களில், 11 நிமிடங்​களுக்​குள் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்தன. இதில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இது தொடர்​பாக மும்பை சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசாரணை​யின் முடி​வில், 12 பேர் குற்​ற​வாளி​கள் என விசா​ரணை நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும், 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிப​தி​கள் அனில் கிலோர் மற்​றும் ஷ்யாம் சந்​தக் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்து வந்​தது. விசாரணை முடிந்த நிலை​யில் நேற்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

அதில், “மும்பை தொடர் குண்​டு​வெடிப்பு வழக்​கில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் மீதான குற்றச்​சாட்​டு​களை ஆதா​ரத்​துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி​விட்​டது. இவர்​கள் இந்த குற்​றத்​தில் ஈடு​பட்​டார்​கள் என சந்​தேகத்​தின் பேரில் கூறுவதை ஏற்க முடி​யாது.

மேலும் விசா​ரணை​யின்​போது மீட்​கப்​பட்ட வெடிபொருட்​கள், ஆயுதங்​கள் மற்​றும் வரைபடங்​கள் ஆகிய​வற்​றுக்கு குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துடன் தொடர்பு இருப்​பது உறுதி செய்​யப்​பட​வில்​லை. இந்த தாக்​குதலில் என்ன வகை​யான குண்​டு​கள் பயன்​படுத்​தப்​பட்டன என்​ப​தைக் கூட அரசுத் தரப்​பால் நிரூபிக்க முடிய​ வில்லை.

எனவே, இந்த வழக்​கில் தொடர்​புடைய 12 பேர் குற்​ற​வாளி​கள் என சிறப்பு நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பும் அவர்களுக்கான தண்​டனை​யும் ரத்து செய்​யப்​படு​கிறது. வேறு எந்த வழக்​கும் நிலு​வை​யில் இல்​லா​விட்​டால் அனை​வரை​யும் சிறையி​லிருந்து விடு​தலை செய்ய வேண்​டும்​.” என்று கூறப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.