வாஷிங்டன்,
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டோடு யுனெஸ்கோ தொடர்ந்து செயல்படுவதே இந்த விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதற்கு முன் 1984-ல் யுனெஸ்கோ அமைப்பு ரஷியாவிற்கு சாதகமாக உள்ளது எனக்கூறி அமெரிக்கா வெளியேறியது. அப்போது ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2002-ல் மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் வெளியேறியுள்ளது.
Related Tags :