Process to Book Coach in Indian Train: இந்திய ரயில்களில் டிக்கெட்டுகளை உறுதி செய்வது மிகவும் கடினமான விஷயமாகும். குறிப்பாக நீங்கள் அதிக பேருடன் ரயிலில் பயணம் செய்யும் போது இது மிகப்பெரிய சவாலாக மாறுமகிறது. ஒரே நேரத்தில் அதிக இருக்கைகளை முன்பதிவு செய்வது ஒரு இன்னலாக இருக்கிறது. ஆனால் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தற்போது இந்த சிக்கலை எளிதாக்கி உள்ளது. நீங்கள் விரும்பினால், முழு ரயில் பெட்டியை அல்லது முழு ரயிலையும் கூட முன்பதிவு செய்துக் கொள்ளலாம். IRCTC நிறுவனத்தின் முழு கட்டண விகிதம் (FTR) சேவையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
எப்படி முன்பதிவு செய்வது?
1. முதலில் IRCTC வலைத்தளத்திற்குச் சென்று, பின்னர் உங்கள் கணக்கில் உள்நுழையவும், உங்களிடம் கணக்கு இல்லையென்றால் புதிய பதிவைச் செய்யவும்.
2. கணக்கில் உள்நுழைந்த பிறகு, ‘Tourism’ பகுதிக்குச் சென்று ‘Book a Coach/Train’ என்கிற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
3. இப்போது ஒரு படிவம் உங்கள் முன் திறக்கும், பயண தேதி, நிலையம் மற்றும் பிற தேவையான விவரங்களை அதில் நிரப்பவும்.
4. அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, ‘சப்மிட்’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. இதற்குப் பிறகு பணம் செலுத்தும் பக்கம் திறக்கும், இங்கே நீங்கள் எளிதாக ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
6. பணம் செலுத்திய பிறகு, அனைத்து முன்பதிவு விவரங்களும் அடங்கிய முன்பதிவு உறுதிப்படுத்தல் ஈமெயில் உங்களுக்குக் கிடைக்கும்.
7. பயண நாளில் சரியான நேரத்தில் நிலையத்தை அடைந்து, முன்பதிவு விவரங்களைக் காட்டி உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
FTR விருப்பம் என்றால் என்ன?
IRCTC மூன்று சார்ட்டர் விருப்பங்களைக் கொண்டுள்ளது.
1. ரயில்வே கோச் சார்ட்டர் – சுமார் 18-100 இருக்கைகள் கொண்ட முழு கோச் ஒன்றையும் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
2. ரயில் சார்ட்டர் – முழு ரயிலையும் முன்பதிவு செய்யுங்கள், அதில் 18 முதல் 24 பெட்டிகள் உள்ளன.
3. சலூன் சார்ட்டர் – வசதியான வாழ்க்கை வசதிகளைக் கொண்ட ஒரு தனியார் சலூனையும் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
புக்கிங் விண்டோ எப்போது திறக்கும்?
ரயில் புக்கிங் விண்டோ பயணத் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு திறந்து பயணம் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பு மூடப்படும். நீங்கள் பல பெட்டிகள் அல்லது முழுமையான ரயிலை முன்பதிவு செய்ய விரும்பினால், SLR/ஜெனரேட்டர் பெட்டிகள் உட்பட 18 முதல் 24 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம்.
சிக்யோரிட்டி பணத்தை டெபாசிட் செய்யவும்
முன்பதிவு செய்யும் போது சிக்யோரிட்டி பணம் டெபாசிட் செய்யப்படும். ஒவ்வொரு பெட்டிக்கும், ரூ.50,000 பதிவு கட்டணம் மற்றும் சிக்யோரிட்டி பணம் (RMSD) டெபாசிட் செய்ய வேண்டும். ரயிலின் அதிகபட்சம் 24 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு ஒப்பந்தம் என்ன?
IRCTC FTR போர்ட்டலில் (https://www.ftr.irctc.co.in) முழு முன்பதிவு செயல்முறையையும் ஆன்லைனில் செய்யலாம்.
1. முதலில் உங்கள் கணக்கைப் பதிவு செய்யவும். பின்னர் OTP ஐ சரிபார்த்து, ரயில், பெட்டி அல்லது சலூன் சேவையின் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
2. இதற்குப் பிறகு புறப்படும் மற்றும் முடியும் இடம், தேதி, பெட்டிகளின் எண்ணிக்கை, ரயில் எண், வகை போன்ற பயண விவரங்களை நிரப்பவும்.
3. இறுதியாக பயணிகளின் பட்டியலைப் பதிவேற்றி முன்பதிவுத் தொகையை நிரப்பவும்.