எல்இடி ஹெட்லைட்டுடன் 2025 ஹீரோ பேஷன் பிளஸ் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 100cc சந்தையில் கிடைக்கின்ற பிரபலமான 2025 பேஷன் பிளஸில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உட்பட டிஜி அனலாக் கிளஸ்ட்டர் ஆனது சேர்க்கப்பட்டு ரூ.81,841 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்த மாடலில் மற்ற வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து , OBD-2B ஆதரவினை பெற்ற பேஷன்+ பைக்கில்  i3S (Idle Stop-Start System) உடன் கூடியதாக தொடர்ந்து 7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc எஞ்சின் பெற்று 4 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இருபக்கத்திலும் 18 அங்குலம் கொண்ட வீல் உடன் டீயூப்லெஸ்  கொண்டுள்ளது. 130மிமீ முன் மற்றும் பின்புற பிரேக் டிரம் பிரேக்கிங் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிறந்த கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக், வலுவான 2-படி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் அமைப்புடன் நீடித்து உழைக்கும் தன்மைக்காக வடிவமைக்கப்பட்டது.

டிஜி அனலாக் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு நிகழ்நேரத்தில் எரிபொருள் இருப்பு, மைலேஜ் உட்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவுகின்றது. இந்த பைக்கில் ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் பிரவுன், பிளாக் கிரே, பிளாக் ப்ளூ என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.