கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாட​வேளையை கடன் வாங்காதீர்கள்: உதயநிதி வேண்டுகோள்

சென்னை: பள்​ளி​களில் கணிதம், அறி​வியல் ஆசிரியர்​கள் உடற்​கல்வி பாட​வேளையை கடன் வாங்​காதீர்​கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் 2024-25ம் கல்​வி​யாண்​டில் நடை​பெற்ற சர்​வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவி​லான விளை​யாட்டு போட்​டிகளில் பதக்​கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்​றிதழ் வழங்​கும் விழா சென்னையில் நேற்று நடை​பெற்​றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து மாணவர்​களுக்கு சான்​றிதழ்​களை வழங்​கி​னார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் தொடங்​கப்​பட்ட ஆற்​றல் ​மிகு உடற்​கல்வி திட்​டத்​தின் கீழ், மாணவர்​களின் நல்​வாழ்வை உறு​திபடுத்​து​வதை நோக்​க​மாக கொண்டு ‘உடற்​கல்வி ஆசிரியர் வளநூல்’ எனும் புத்​தகத்தை 3 தொகு​தி​களாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வெளியிட்டார். முதல் பிர​தியை பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பெற்​றுக்​கொண்​டார்.

அப்​போது உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: பாடப்​புத்​தகத்​தில் இருக்​கும் கல்வி மட்​டுமின்​றி, விளை​யாட்டு மூல​மாக​வும் நிறைய விஷ​யங்​களை மாணவர்​கள் கற்​றுக்​கொள்ள முடி​யும். நட்​பு, நம்​பிக்​கை, ஒத்​துழைப்​பு, குழு​வாக பணி​யாற்​று​தல், உத்திகளை திட்​ட​மிடு​தல், அதை செயல்​படுத்​துதல் போன்ற வாழ்க்​கைக்கு தேவை​யான அனைத்​தை​யும் விளை​யாட்டு நமக்கு கற்​றுக்​கொடுக்​கும்.

படிப்​பிலும், விளை​யாட்​டிலும் ஈடு​படும் மாணவர்​கள் தனிச்​சிறப்​புடன் இருப்​பார்​கள். எனவே கல்​வி, விளையாட்டு இரண்​டிலும் மாணவர்​கள் கவனம் செலுத்த வேண்​டும். தமிழகத்​தில் விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கப்​படுத்​து​வதற்​காக தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை மூலம் நிதி​யுதவி மற்​றும் விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்​கு​வதற்​கான உதவி​களை செய்​து​ வருகிறோம்.

தகு​தி​யுள்ள வீரர்​கள் https://tnchampions.sdat.in என்ற இணை​யதளத்​தில் அதற்​காக விண்​ணப்​பித்து பயனடை​யு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன். நடப்​பாண்​டுக்​கான தமிழ்​நாடு முதல்​வர் கோப்​பைக்​கான முன்​ப​திவு தொடங்​கப்​பட்​டுள்​ளது. ரூ.36 கோடி பரிசுத் தொகை​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் மாணவர்​கள் அனை​வரும் கலந்​து​கொள்ள வேண்​டும். மாணவர்​கள் சார்​பாக, பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் முன்பு ஆசிரியர்​களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்​பு​கிறேன். உடற்​கல்வி பாட​வேளையை (பிஇடி பீரியட்) எந்த ஆசிரியரும் கடன் வாங்கி அதில் மற்ற பாடங்​களை நடத்த வேண்​டாம்.

வேண்​டு​மா​னால் கணிதம், அறி​வியல் பாட​வேளையை பிஇடி பீரியடுக்காக கடன் கொடுங்​கள். பிஇடி பீரியடு​கள் என்​பது மாணவர்​களின் உரிமை. அதில் மாணவர்​கள் நிச்​சய​மாக விளை​யாட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, பள்​ளிக் கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத் தலை​வர் திண்​டுக்​கல் ஐ.லியோனி, மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் துணைத் தலை​வர் பி.​வி.பி.​முத்​துக்​கு​மார், தனி​யார் பள்ளி சங்​கத் தலை​வர் அரசகு​மார், தமிழ்​நாடு ஆசிரியர் முன்​னேற்ற சங்​கத்​தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர்​ தி​யாக​ராஜன்​, பரந்​தாமன்​ எம்​எல்​ஏ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.